Home # முன்னுரை #

# முன்னுரை #

08 Feb

# முன்னுரை #

# முன்னுரை #
இறைவனால் அருளப்பட்ட சித்தம் சிவமயம் ஞான தான அறக்கட்டளை மேன்மையான சிவஞானத்தை எளிய முறையில் மக்கள் அறியும் வகையில் புத்தகங்களை
வண்ணப்படங்களுடனும்,தமிழ் விளக்கத்துடனும் ஞானதானமாக வெளியிடுவதை முழுமுதல் நோக்கமாக கொண்டுள்ளது .

“எம்மை எதுவாக கருதி வழிபடுகின்றீர்களோ,யாம் அதுவாகவே இருந்து அனைத்து நன்மைகளையும் வழங்குகிறோம்”(அப்படியே ஆகட்டும்) என்ற ரிபு கீதையின் வாக்கியத்திற்கு நிலைப்பாடாக வாழ்ந்தவர் “சாநித்யகுரு”,கார்வார், பூஜ்யஶ்ரீ”புஷ்பவன நாயகம் ஆண்டவர்” அடியேனது முதல் குரு. சிந்தையில் சிவத்தை ஊற்றி வளர்த்த அவரது உபதேசங்களில் சிவகீதை, குருகீதை,ரிபுகீதை, திரு மூலரின் திருமந்திரம் ஆகியன முக்கிய இடம் வகித்தன. அவரே அடியேனை குகானந்த குருபீடத்தில் ஞான தான அறக்கட்டளைக்கு ஶ்ரீ குருவாக பயிற்சி கொடுத்தவர். அடியேனது வாழ்வில் ஆன்மிக அருள் அனுபவங்களை ஏற்படுத்திய அனைத்து குருமார்களுக்கும் அடியேனது வணக்கங்கள்.

சித்தம் சிவமயம் ஞான தான அறக்கட்டளையின் முதல் வெளியீடான இந்த சிவகீதையானது,பதிணெண்புராணங்களில் ஒன்றான பத்மம் எனும் மகாபுராணத்தில் உத்தரபாகத்தில் 4-ஆவது பாதாள கண்டத்தில் 23-ஆம் சூசியில் சிவகீதை என்ற உபநிடதத்தில் உள்ளது. 1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கிரந்தத்தில் உள்ள இந்த சிவகீதைக்கு மருவூர்”பிரம்மஶ்ரீ” கணேச சாஸ்திரியார் அவர்கள் எழுதிய விளக்க உரையே தொன்மையானதாகவும் சிறப்பான தாகவும் அறிய முடிகிறது. அவரின் விளக்க உரையையே புதுபித்து வெளியீடாக வெளியிடப்படுகிறது.

எங்களது பணியையும் நோக்கத்தையும் அறிந்து ஆசியுரை வழங்கிய திருவிடைமருதூர் சிவஶ்ரீ சா.கண்ணப்ப சிவாசாரியார் ஐயா அவர்களுக்கு தாள் பணிந்த வணக்கங்கள். மேலும்,இந்த சிவகீதை மலரை தம் பொற்கரங்களாலேயே வெளியிட ஒப்புதலும் ,ஆசிர்வதித்தும் அருளாசியுரையும் தந்த பெருங்குளம், திருக்கைலாயபரம்பரை செங்கோல் ஆதீனம்,103 வது குருமகா சன்னிதானம் “ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள்” அவர்களுக்கு தாள் பணிந்த வணக்கங்கள்.

சிவகீதை நூலை வெளியிட அதற்கான ஒப்புதலை அவர் தம் பெயர்களிடம் பெற்றுக்கொடுத்தும் நூலினைப் பதிப்பித்துக் கொடுத்தும் உதவிய திருச்சிரப்பள்ளி , ஶ்ரீகணநாத நாயனார் நூலக போற்றுநர் ,சிவஶ்ரீ.மு ஜயக்குமார் அவர்களுக்கும்,எனது ஆன்மீக முகநூல் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்த உதவியவரும்,இந்த தமிழ் விளக்க மூலநூல் கொடுத்து தவியவருமான சென்னை வாழ் சிவஶ்ரீ ஜெ.கார்த்திக் அவர்களுக்கும் அறக்கட்டளை சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்
பெருமதிப்புமிக்க இந்த சிவஞானப் பெட்டகம் நமது
அறக்கட்டளையின் நோக்கத்தின் ஞானதானமாக வே வழங்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பான 1000 புத்தகங்களுக்கு தேவையான பொருளை வழங்கி இந்தச் சிவபுண்ணியத்தில் பங்கு கொண்ட சிவபுண்ணியச்செல்வர்களுக்கும் என்றென்றும் சிவபெருமானின் அருளாசி உரித்தாக சிவசக்தியை பிரார்த்தனை செய்கிறோம். அந்த சிவபுண்ணியச் செல்வர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

” எமது அடுத்த வெளியீடுகள் ”
சிவகீதையின் அடுத்த பதிப்பில் சிவகீதையின் கருத்துக்களை தெளிவு படுத்தத் தேவையான வண்ணப்படங்களுடனும்,மூலம் கிரந்தம்+தேவநாகரி+தமிழ் எழத்துக்களையும் அதற்கான தமிழ் உரையும்,பத்ம புராணத்திலுள்ள வேதசார சிவ ஸஹஸ்ரநாமம்.அகத்தியர் இராமருக்கு உபதேசம் செய்தது.(சிவகீதை-அத்.3-சுலோ.-32)சேர்த்து வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. கந்தபுராணத்தி
லுள்ள சிவபெருமானின் சிவபராக் கிரமம் என்னும் 64வடிவங்கள் பற்றி விரிவான வரலாறுகளுடன் தனித்தனி நூல்களாக வெளியிடுதல்.
அடுத்ததாக ரிபுகீதையை வெளியிட்டு சாநித்திய குருவிற்கு நன்றி காணிக்கையை செலுத்த விரும்புகின்றோம்.ரிபுகீதை என்பது கைலாயத்தில் பரமசிவனால் உமாதேவிக்கு சம்பாவனையாக (உரைநடையாக)உபதேசிக்கப்பட்ட பதினாறு அம்சங்கள் கொண்டது. மஹா இதிகாசமான சிவரகசியத்தில் ஆறாவது அம்சமாக ரிபுகீதை உள்ளது. ரிபுகீதை பரமசிவனால் ரிபு முனிவருக்கும்,ரிபு முனிவரால் கேதாரஸ்தலத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டதாகும்.
ஐம்பது அத்தியாயங்களில்2493 வடமொழி சுலோகங்களை கொண்டதாகும். இதன் வடமொழி மூல சுலோகத்திற்கான தமிழ் உரை தமிழ் போற்றும் சைவ உலகிற்க்கு கிடைக்கவில்லை சிவ அடியார்கள் அனைவரின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமானின் கருனையால் நிச்சயம் வழி கிடைக்கும். அது போலவே மற்ற சிவஞான விசயங்களும் வெளியிட உள்ளோம்.

குறுகிய காலத்தில் சிறந்த முறையில் அச்சிட்டுக் கொடுத்த ஆர். ஜி.பிரிண்டர்ஸ் உரிமையாளர் உயர்திரு. ஆர். ஞானசேகரன் அவர்களுக்கும்,அவர் தம் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே”
என்ற திருமுலரின் வரிகளுக்கு ஏற்ப இறைததன்மையை பற்றி பேசப்பேச எழுத எழுத நினைக்க நினைக்க இறைவன் நம் மூலம் வெளிப்பட்டு நம் உயிர் இறைத்தன்மை பெற்று வருகிறது.

வாரீர்!ஊர் கூடித்தேர் இழுப்போம் வாரீர்!
வாரீர்!சிவனருள் பெறுவோம் வாரீர்!
ஆகவே , இந்த சிவபுண்ணியங்களை வழிநடத்திட,பெரியோர்கள் நல்லாசிகளையும், நல் ஆதரவையும் வழங்கிட வேண்டுகிறோம். இந்த சிவபுண்ணியங்களில் பங்கு பெற விருப்பம் உள்ள அன்பர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த சிவபுண்ணியங்களுக்கு (ஞானதானத்திற்கு) தேவையான பொருள்களை தானமாகத் தரலாம். வரைபடக்கலைஞர்கள்,ஈகூக டிசைனர்கள்,தங்கள் திறமையை தானமாகத் தரலாம். புத்தக வெளியீட்டாளர்கள் எஙாகளோடு இணைந்து செயல்பட வேண்டுகிறோம். ஏற்போர் இணைந்து வாருங்கள்,அதுவே இறைவனின் ஆசியைப் பெற எளிய வழியாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *